திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூ பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே (BRIAN UDAIGWE) அவர்கள் யாழ். மறைமாவட்டத்திற்கு மேய்ப்பு பணி விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 25ஆம் திகதி யாழ். மறைமாவட்டத்திற்கு இவர் வருகைதந்து குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவில் கலந்துகொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள பிரசித்திபெற்ற இடங்களை தரிசித்து குருக்கள் துறவியர் இறைமக்களுடன் கலந்துரையாடுவாரெனவும் தெரிவித்த குருமுதல்வர் 26ஆம் திகதி இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெறவுள்ள திருநாள் திருப்பலியில் பங்குபற்றுவதுடன் அன்று மதியம் வன்னியில் இனஅழிப்பு யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை தரிசித்து அங்குள்ள மக்களை சந்திக்கவுள்ளரெனவும் தொடர்ந்து முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெறவுள்ளநற்கருணை ஆராதனையிலும் பங்கெடுப்பாரெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.