திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 42ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுகநல நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசலா அலெக்ஸாண்டர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் தலைமைதாங்கி விழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், வைத்தியசாலை தாதியர்கள், பணியாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin