யாழ். கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை சுகநல நிலைய சத்திர சிகிக்சை கூடத்தில் நவீன முறையில் வயிற்றில் உட்காண் சத்திர சிகிக்சை (LAPROSCOPIC SURGERY) மேற்கொள்ளுவதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டு சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் கோபிசங்கர் அவர்களினால் 28.07.2021 புதன்கிழமை அன்று சத்திர சிகிக்சை ஒன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வயிற்றில் மேற்கொள்ளப்படும் உட்காண் அறுவைசிகிச்சை தற்காலத்தில் காணப்படும் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவமாகும். இச்சிகிச்சை முறை மூலம் வயிற்றில் ஒரு சிறிய துவாரமிடப்பட்டு அதனுடாக உள்பகுதியில் தொலைவில் அமைந்துள்ள ஓர் இடத்தில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. வழமையான திறந்தநிலை அறுவைச்சிகிச்சை முறையை பார்க்கிலும் இதில் பலநன்மைகள் உள்ளன என வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இச்சத்திர சிகிச்சையில் சிறிய வெட்டு காயம் மட்டும் ஏற்படுவதால் குருதிப்பெருக்கமும் வலியும் மிக குறைவாக காணப்படுவதுடன் நோயாளி குணமடையும் காலமும் மிகவும் குறுகியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.