போர்டோவின் திருகுடும்ப சபையின் துணை குருக்களுக்கான தேசிய ஒன்றுகூடல் கடந்த 28, 29 ஆம் திகதிகளில் மடுத்திருத்தல தியான இல்லத்தில் நடைபெற்றது.இலங்கையின் எல்லா பாகங்களிலும் இருந்து 28 திருகுடும்பத் துணைக் குருக்கள் இவ்வொன்று கூடலில் பங்குபற்றினார்கள். திருக்குடும்ப ஆன்மீகமும் கூட்டொருங்கியக்க திருஅவையும் என்ற கருப்பொருளில் உரைகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்றதோடு, இவற்றின் அடிப்படையிலான நடைமுறை தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் திருகுடும்ப சபையின் உலகளாவிய ஆலோசகர் அருட்சகோதரி ஜெனி சந்தோஸ் அவர்களும் இலங்கை வடக்கு மாகாணத் தலைவி அருட்சகோதரி தியோபேன் குரூஸ் அவர்களும், இலங்கையின் தெற்கு மாகாணத் தலைவி அருட் சகோதரி சண்டனி அவர்களும் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.திருக்குடும்பத் துணைக் குருக்கள் வருடா வருடம் நடத்தும் இவ் ஒன்றுகூடலை இலங்கையின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.