திருகோணமலை மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவச்சுற்றுலா கடந்த மாதம் 30ஆம் 31ஆம் திகதிகளில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் அருட்தந்தை அகஸ்ரின் கொன்பியுசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் கண்டி தலதாமாளிகை, பேராதனைப் பூங்கா, பேராதனைப் பல்கலைக்கழகம், மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம், மாத்தளை பிரான்சிஸ்கன் இல்லம், கொழும்பு தேசிய நூதனசாலை, தாமரைக்கோபுரம், தாமரைத்தடாகம், பாராளுமன்றம், இலங்கை ருபவாகினி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு வர்த்தக மையம் போன்ற இடங்களைப் பார்வையிட்டனர்.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல், அமலமரித்தியாகிகள் சபையினர், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோரின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட இச்சுற்றலா நிகழ்வில் 100 மாணவர்களும், 10ஆசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.


