திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட யூபிலி ஆண்டு ஆரம்ப நிகழ்வு கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமையில் புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் யூபிலி கதவை ஆசீர்வதித்து யூபிலி ஆண்டை அங்குரார்ப்பணம் செய்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து மறைமாவட்ட சமூக தொடர்பு நிலைய வெளியீடான அலை ஓசை சஞ்சிகையின் யூபிலி அண்டு சிறப்பிதழ் வெளியிட்டு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin