திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை திருகோணமலை புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் திருகோணமலை மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கும் நடைபெற்றன.

இத்திருப்பலியில் குருக்கள் துறவிகள் அருட்சகோதர்கள் இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

அத்தடன் திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் புனித வார சிறப்பு நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட தேவையில் இருப்போருக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர்களால் சேகரிக்கபட்ட உலர் உணவு பொருட்கள் தேவையில் இருப்போருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

By admin