திருகோணமலை மறைமாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ஊடகமைய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்ஊடகமைய திறப்பு விழா 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
மறைமாவட்ட தொடர்பாடல் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் கலந்து சமூக கலைத்தொடர்பு மையத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.