தாளையடி றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தாளையடி பொது மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு. பேரின்பநாதன் ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அநுராதபுரம் கெப்பிற்றிக்கொல்லாவை உதவிப்பிரதேச செயலாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான திரு. பிரான்ஸிஸ் கெனியூட் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வடமராட்சி வலய கல்வி அலுவலக ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி. சித்திரகலா வித்தியாபதி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் செம்பியன்பற்று தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.