தாளையடி சென். அன்ரனிஸ் முன்பள்ளி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. கவியரசி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காப்பாளர் அருட்தந்தை ஜஸ்ரின் ஆதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலய முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. சத்தியசீலன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் தாளையடி றோ.க.த.க பாடசாலை அதிபர் திரு. பேரின்பநாதன் ஜெயகாந்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் மருதங்கேணி கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி. ஜெயந்தி மற்றும் தாளையடி கார்மேல் அலையக கன்னியர் மடத்தலைவி அருட்சகோதரி புஸ்பராணி இராயப்பு ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin