தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அன்றைய தினம் மாலை, யாழ். அகவொளி குடும்பநல இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் தாத்தா பாட்டியினர் பேரப்பிள்ளைகளுடன் பவனியாக அழைத்து வரப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
திருப்பலி நிறைவில் அவர்களை கௌரவிக்குமுகமாக கலைநிகழ்வுகளும் விளையாட்டுக்களும் இடம்பெற்றதுடன் பேரப்பிள்ளைகளால் பரிசுகளும் பங்கு சார்பாக வாழ்த்துமடலும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான தாத்தா பாட்டியினர் கலந்துகொண்டனர்.



