மட்டக்களப்பு மறைமாவட்டம் தாண்டியடி சிலுவை மலை குழந்தை இயேசு திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட சிலுவைப்பாதை தியானம் கடந்த 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜென்சன் லொயிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்கள் கலந்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் மட்டக்களப்பு புனித அருளானந்தர் ஆலய இளைஞர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தில் தியான உரைகள், விவிலிய விளையாட்டுக்கள், திரைப்பட காட்சிப்படுத்தல் என்பவை இடம்பெற்றன.