கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால ஆன்மீக எழுச்சித் திருப்பயணம் கடந்த பங்குனி மாதம் 09ஆம் திகதி ஆரம்பமாகி இம்மாதம் 12ஆம் திகதி வரை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளரேசியன் சபை அருட்தந்தை ஜோய் மரியரெட்ணம் அவர்களின் தலைமையில் 40 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் இல்ல தரிசிப்புக்கள், நற்கருணை வழிபாடுகள், திருப்பலிகள், நற்கருணை மற்றும் திருச்செபமாலை பவனி, அன்பிய திருப்பலிகள், இளையோர், சிறுவர் மற்றும் குடும்ப வார நிகழ்வுகள், இறையழைத்தல் கருத்தமர்வுகள் என்பன இடம்பெற்றன.
இறுதிநாள் நிகழ்வு 12ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமையில் நன்றி திருப்பலியும், தொடர்ந்து யூபிலி சிலுவை ஆராதனையும் இடம்பெற்றதுடன் ஆலய நாற்சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட வரவேற்பு திருச்சிலுவை ஆண்டவர் திருச்சொருபமும் குருமுதல்வர் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.