மன்னார் மறைமாவட்டம் தலைமன்னார் மற்றும் பேசாலை பங்குகளில் வலய ரீதியாக முன்னெடுக்கப்பட்ட கரோல் பாடல் போட்டிகள் கடந்த 15ஆம் 22ஆம் திகதிகளில் நடைபெற்றன.
தலைமன்னார் பங்கில் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை டெனி கலிஸ்ரஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போட்டியில் தலைமன்னார் மேற்கு கிராமத்தில் இருந்து 07 குழுக்களும், தலைமன்னார் பியர் கிராமத்தில் இருந்து 03 குழுக்களும், தலைமன்னார் ஸ்ரேசன் கிராமத்திலிருந்து 01 குழுவுமாக மொத்தம் 11 வலயங்களைச் சேர்ந்த குழுக்கள் இப்போட்டியில் பங்குபற்றினர்.
அத்துடன் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேசாலைப் பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை சத்தியராஜ் அவர்களின் தலைமையில் வலயங்களுக்கிடையில் நடைபெற்ற கரோல் குழுப்பாடல் மற்றும் குழு நடனப் போட்டி ஆகியவற்றில் 10 வலயங்கள் கரோல் குழுப் பாடல் போட்டியிலும், 5 வலயங்கள் குழு நடனத்திலும் பங்குபற்றினர்.

By admin