தேயிலைத்தோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200வது ஆண்டை நினைவுகூர்ந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தேசிய கிறிஸதவ மன்றமும் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நடைபவனி கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
தலைமன்னாரிலிருந்து மாத்தளைவரை வேர்களை மீட்டு உரிமை வென்றிட என்னும் கருப்பொருளில் முன்னெடுக்கப்படும் நடைபவனி 28ஆம் திகதி தலைமன்னாரிலிருந்து ஆரம்பமாகி நடைபெற்றுவருவதுடன் ஆவணி 12 ஆம் திகதி மாத்தளையை சென்றடையவுள்ளது.
இப்பவனி மலயக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி அவர்களின் கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி அவற்றிற்கு ஆதரவு கொடுக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்டடுவதுடன் இப்பவனியில் அருட்தந்தையர்கள், பிறமத குருக்கள், மலையக மக்கள் என பலரும் கலந்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.



