தர்மபுரம் பங்கு மக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இலங்கை வங்கியின் விசுவமடு கிளை முகாமையாளர் திரு. நியூமன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரி ஸ்ரெலா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin