தர்மபுரம் பங்குமக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொங்கல் நிகழ்களும் தொடர்ந்து பண்பாட்டு திருப்பலியும் நடைபெற்றது.
திருப்பலி நிறைவில் பங்குமக்களுக்கிடையிலான கோலப்போட்டி நடைபெற்றதுடன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் ஏற்பாட்டில கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை அங்கு நடைபெற்றது.