யாழ்ப்பாணம் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தனிநாயகம் அடிகளார் நான்காவது நினைவுப் பேருரை கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
ஆய்வு மைய தலைவர் அருட்தந்தை அமிர்த ஜெயசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இந்தியா தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் திரு. சின்னப்பன் அவர்கள் கலந்து ‘தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் கல்விப் பணிகள்’ என்னும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார்.
யாழ். பல்கலைக்கழக கல்வியியல் துறை விரிவுரையாளர் திரு. சர்வேஸ்வரா, கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் திரு. சந்திர மௌலீசன் லலீசன் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு. சிவஞானசீலன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.