ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் ஏற்பாட்டில் ஜேர்மன் நாட்டின் பல இடங்களிலும் தவக்கால இறைதியான வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பணியக இயக்குனர் அருட்தந்தை நிருபன் நிசானந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றுவரும் இத்தியானங்களில் இலங்கை கத்தோலிக்க நற்செய்தி பணியாளர் சகோதரர் நிக்கலஸ் கிசோக் அவர்கள் கலந்து திருப்பலி, இறைவார்த்ததைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை என்பவற்றினூடாக மக்களை நெறிப்படுத்தி வருகின்றார்.
இத்தியானங்களில் ஜேர்மன் நாட்டில் இயங்கிவரும் தமிழ் கத்தோலிக்க பணித்தள மக்கள் பக்தியுடன் பங்குபற்றி வருகின்றனர்.
அத்துடன் ஜேர்மன் நாடு முழுவதிலும் சேகரிக்கப்படும் தவக்கால நிதியை கொண்டு ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவனம் வருடாந்தம் வெவ்வேறு நாடுகளில் வறுமையில் வாடும் மக்களுக்கு பல உதவிகளை வழங்கிவருகின்றது.
இவ்வருடம் சேகரிக்கப்படும் நிதி, இலங்கை மலையக தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதரம், உரிமை, கல்வி, மருத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் மலையக மக்களுக்கு வழங்க மிசறியோ நிறுவனம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் அண்மையில் ஜேர்மன் நாட்டின் எசன் மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிசாந்த சில்வா, ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை நிரூபன் நிசானந்த் ஆகியோர் கலந்துகொண்டார்.