ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை எசன் மாகநகரில் நடைபெற்றது.
ஜேர்மன் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை நிருபன் தார்சீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பண்பாட்டு திருப்பலியும் தொடர்ந்து பொங்கலும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
கலை நிகழ்வுகளில் நடனம் வில்லுப்பாட்டு நாடகம் என்பன இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஜேர்மன் நாட்டில் இயங்கிவரும் தமிழ் கத்தோலிக்க பணித்தளங்களிலிந்து 300ற்கும் அதிகமான மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.