நீதி மற்றும் சமாதானத்திற்கான வடக்கு கிழக்கு குருக்கள் துறவிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் நியமனம் தொடர்பான இணையவழி விழிப்புணர்வு கருத்தமர்வு கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஒன்றிய இணைப்பாளர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொகான் டோமினிக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் தொடர்பில் குருக்கள் துறவிகள்மத்தியில் கூட்டு நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டஇக்கருத்தமர்வில் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் கருத்தியலின் நோக்கம் அதன் தேவைப்பாடு தொடர்பான விளக்கவுரையயை தமிழ் சிவில் சமூக அமைய செயற்பாட்டாளர் திரு. சுந்தரேஸ்வரன் அவர்கள் நிகழ்த்த தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பொது வேட்பாளர் தேவைப்பாடு அதன் பின்புலத்திலுள்ள சாதக பாதக விளைவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இவ்இணையவழி கருத்தமர்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், வடக்கு கிழக்கு குருக்கள் துறவிகள், அருட்சகோதரிகள் மற்றும் தமிழ் சிவில் சமூக அமைய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

By admin