மட்டக்களப்பு சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகாவித்தியாலய அதிபராக கடந்த காலங்களில் பணியாற்றிய அருட்சகோதரி சிறியபுஸ்பம் அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அருட்சகோதரியின் 10 வருட பணி நிறைவை கௌரவித்து சிற்பி எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அவருக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக
விரிவுரையாளர் அருட்தந்தை நவரத்தினம், சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. மகேந்திரகுமார், பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு. பரமதயாளன், சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்குத்தந்தை அருட்தந்தை ஜுனோ சுலக்சன், அருட்சகோதரிகளென பலரும் கலந்து  சிறப்பித்தனர்.

 

By admin