செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வு போட்டி 18ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் திரு. செல்வரட்ணம் பகீரதகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் திரு. சந்திரகுமார் கஜந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் செம்பியன்பற்று தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். கனகரட்ணம் மத்திய மகா வித்தியாலய முன்னாள் அதிபர் திருமதி. லுடேவிக்கா மகேஸ்வரன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.