யாழ்ப்பாணம் செம்பியன்பற்று றோமன் கத்தோலிக்க தமிழ்கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கால்கோல் விழா 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் திரு. பகீரதகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் சிறார்களுக்கான ஆசீர்வாதமும் தொடர்ந்து பாடசாலையில் கால்கோல் விழா நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் செம்பியன்பற்று அ.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கால்கோல் விழா நிகழ்வும் பாடசாலை அதிபர் திரு. கணேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அன்றைய தினம் நடைபெற்றது.