தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில், அருட்சகோதரி கிறிஸ்ரினா அவர்களின் வழிநடத்தலில் கடந்த 24ஆம் திகதி ஆரம்பமாகிய இந்நிகழ்வுகளில் கடற்கரை விளையாட்டு, கலைநிகழ்வுகள், கள அனுபவ பயணம், நோயாளர் இல்லத் தரிசிப்பு, தீப்பாசறை என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைக்கல்வி தினம் மற்றும் சர்வதேச சிறுவர், முதியோர் தினத்தை சிறப்பிக்கும் நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றதுடன் செம்பியன்பற்று, நல்லூர் பங்குகளின் மறைக்கல்வி மாணவர்களை இணைத்து பாசறை நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.