செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
17ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனி இடம்பெற்றதுடன் இப்பவனியின் போது கடற்கரை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பிலிப்புநேரியாரின் வரவேற்பு திருச்சொருபமும் பங்குத்தந்தை அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.
பவனியின் நிறைவில் புதிய ஆலய கட்டுமாணப்பணி நிதி சேகரிப்புக்கென முன்னெடுக்கப்பட்ட அதிஸ்டலாபச் சீட்டிழுப்பு இடம்பெற்று வெற்றி பெற்றோருக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக சென் பிலிப்நேரிஸ் விளையாட்டுக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் அன்று மாலை அங்கு நடைபெற்றன.