செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித செபஸ்தியார் திருவிழா மற்றும் திருப்பாலத்துவசபை தினம் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலியும் தொடர்ந்து மாலை புனித பிலிப்பு நேரியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்காக மேடையேற்றப்படவுள்ள கூத்திற்கான காப்பு பாடப்பட்டு தோழமை விருந்தும் இடம்பெற்றது.