யாழ்ப்பாணம் செம்பியன்பற்று அ.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கடந்த 06ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு. சுப்பிரமணியம் கணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி வலயக்கல்வி அலுவலக கணக்காளர் திரு. இராஜலிங்கம் தனரூபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கரவெட்டி பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரும் பாடசாலையின் பழைய மாணவருமான திரு. சண்முக பாஸ்கரன் சந்திரகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும்; கலந்துகொண்டனர்.