சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் பணியக பணியாளர்களுக்கான தியானம் 18ஆம் திகதி சனிக்கிழமை சுவிட்சலாந்து நாட்டின் ஓல்ரன் மாநகரிலுள்ள புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பணியக இயக்குநர் அருட்தந்தை முரளிதரன் அவர்களின் தலைமையில் அருட்பணிப் பேரவையினரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. டியுட்டர் ஆகியோர் கலந்து தியானத்தை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து சிறப்பித்துடன் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.