யாழ். சுன்னாகம் றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. கந்தையா றதீஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மடு வலயக்கல்வி பணிப்பாளரும் பாடசாலையின் பழைய மாணவியுமான திருமதி. வொலன்ரைன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான திரு. யஸ்ரின் யூட், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய நிதிச்செயற்பாட்டு முகாமையாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான திரு. ஜோர்ஜ் ராஜன், யாழ். நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியரும் பாடசாலையின் பழைய மாணவியுமான திருமதி. றெஜீனா ஞானரஞ்சிதன் மரியதாஸ், சுன்னாகம் உழைக்கும் கரங்கள் அமைப்பின் போசகரும் பாடசாலையின் பழைய மாணவருமான திரு. யோகராஜன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

அத்துடன் சுன்னாகம் பங்கிற்குட்பட்ட ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட கால்கோள் விழாவும் நேற்றைய தினம் நடைபெற்றது.

முன்பள்ளி போசகர் அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் முன்பள்ளி பொறுப்பாசிரியரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளியில் புதிதாக இணைந்துகொண்ட 15 மாணவர்களையும் அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்கள் ஆசீர்வதித்து அவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை ஆரம்பித்துவைத்தார்.

By admin