சுன்னாகம் புனித அந்தோனியார் முன்பள்ளி விளையாட்டு போட்டி கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
முன்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. கவிதா அவர்களின் தலைமையில் காப்பாளர் அருட்தந்தை நிக்சன் கொலின் அவர்களின் வழிநடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் Sunshine Healthcare Lanka Ltd நிறுவன வியாபார அபிவிருத்தி முகாமையாளரும் உரும்பிராய் லயனஸ் கழக தலைவருமான லயன் மயூரதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாணம் தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளி அதிபர் திரு. தம்பி ஐயா வாமதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், கலைஞர் திருமதி. பெனிபஸ் தைரியநாதன் தங்கேஸ்வரி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.