தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
பங்குத்தந்தையின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலியில் முன்பள்ளி சிறார்களின் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்ட தாத்தா பாட்டியினர் தமது பேரப்பிள்ளைகளால் பூக்கொத்து வழங்கிவைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டனர்.
 
திருப்பலி நிறைவில் அவர்களை கௌரவிக்கும் முகமாக பேரப்பிள்ளைகளால் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான விருந்துபசாரமும் நடைபெற்றது.

By admin