சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வமத வழிபாடுகளும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றன.
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. குணபாலன் மற்றும் நீதிபதி திரு. அலெக்ஸ்ராஜா ஆகியோருடன் 1000ற்கும் அதிகமான மக்கள் கலந்து இறந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினார்கள்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/51-850x478.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/53-800x478.jpg)