யாழ். சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய வின்சென்ட் டி போல் சபையின் வருடாந்தம் கூட்டம் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், தலைவி திருமதி ஜெயசீலி டெக்னீசியன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரி திரேசில்டா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் மத்திய சபை ஆன்ம ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் மற்றும் மத்திய சபை பிரதிநிதிகள், மகிமை அங்கத்தவர்கள், பக்திச்சபை அங்கத்தவர்கள், பங்கு மக்களென பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.