சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இத்தியானத்தில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெயபாலன் அவர்கள் கலந்து தியான உரை, திரைப்பட காட்சிப்படுத்தல், ஒப்புரவு அருளடையாளம் என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினார்.

இத்தியானத்தில் 60 வரையான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் சுண்டுக்குளி பங்கில் முன்னெடுக்கப்பட்ட காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம் கடந்த 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய சிலுவைப்பாதை புனித திரேசம்மாள் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது. இச்சிலுவைப்பாதை தியானத்தில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin