சில்லாலை பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சில்லாலை புனித கதிரை மாதா ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. திருப்பலியை அருட்தந்தை றெக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
தொடர்ந்து அன்று மாலை கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் உடுவில் பங்குதந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்கள் பிரதம விருத்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.