மட்டக்களப்பு மறைமாவட்டம் அக்கரைப்பற்று புனித ஆரோக்கிய அன்னை மற்றும் திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலய பங்குமக்கள் இணைந்து முன்னெடுத்த சிலுவைப்பாதை பாதயாத்திரை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை டனுஸ் கிளாஸ் மற்றும் அருட்தந்தை ஜென்சன் லொயிட் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை அக்கரைப்பற்று புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி திருக்கோவில் புனித சூசையப்பர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.
இவ்யாத்திரையில் அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.