சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்ற அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய அவர்கள் 02ஆம் திகதி இன்று சனிக்கிழமை சிலாபம் புனித மரியன்னை பேராலயத்தில் புதிய ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார்.
அருட்தந்தை அவர்கள் 1997 ஆம் சிலாபம் மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியதுடன் உரோம் ஊர்பானியான பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்துறையில் கலாநிதி பட்டத்தைப்பெற்று மறைமாவட்ட நீதித்துறை ஆயர் பதில்குருவாகவும் மற்றும் அம்பிட்டிய தேசிய குருமடத்தில் 2013லிருந்து 2019 வரை இறையியல் கற்கைநெறி பீடத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.