இளவாலை புனித யாகப்பர் ஆலய வளாகத்தில் இயங்கிவரும் எழுச்சியகம் முன்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த சிறுவர் பூங்காவின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை சூசை பெனியன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து புதிய பூங்காவை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
தொடர்ந்து சிறார்களின் கண்காட்சியும், சிறுவர் சந்தை நிகழ்வும் அங்கு இடம்பெற்றன.
இப்பூங்காவிற்கான நிதி அனுசரணையை மெரில் ஜெ பெர்ணாண்டோ நிறுவனம் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.