சலேசியன் சபையின் இலங்கைக்கான பிரதிநிதியும் புனித டொன் பொஸ்கோ நிறுவன தென்னாசிய பிராந்திய தலைவருமான அருட்தந்தை பிஜீ மைக்கல் மற்றும் அவருடைய செயலாளர் அருட்தந்தை வின்சென்ட் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் பல்லவராயங்கட்டு டொன் பொஸ்கோ நிறுவனத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை இயக்குனர் அருட்தந்தை மெல்வின் மற்றும் தொழிற்கல்வி நிறுவன அதிபர் அருட்தந்தை நதீப் ஆகியோரை சந்தித்து நிறுவனம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் அங்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனான ஒன்றுகூடல்களிலும் பங்குபற்றி நிறுவனத்தின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து நிறுவன ஆவணங்களையும் பார்வையிட்டனர்.