வட மாகாண அமலமரித்தியாகிகள் சபையின் அனுசரணையில் மாற்றம் அறக்கட்டளை அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட சமூக எழுச்சிக்கான வலைப்பின்னல் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் கடந்த மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பகத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட முன்னாள் அரச அதிபர் திரு. வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சமூக எழுச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அருட்தந்தை வின்சன் பற்றிக் அருட்தந்தை நிர்மல், மௌலவி சுபியான், பேராசிரியர் ஜோசப் ராஜசூரியர், திரு.சிவகங்காதரன், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்களென 20வரையானவர்கள் பங்குபற்றினார்கள்.