திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய கட்டமானப்பணிக்கு நிதி சேகரிக்கும் நோக்கோடு அங்கு முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் வீடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவந்து விற்றல் வாங்கல் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.