யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய வார நிகழ்வுகள் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி 19ஆம் திகதி வரை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “இறைவார்த்தைப்பகிர்வு, குடும்ப செபம், ஒப்புரவாகுதல்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்பிய அமர்வுகள், வலயத் திருப்பலிகள், அன்பிய ஒன்றுகூடல், மல்வம் பங்கு அன்பிய ஊக்குவிப்பாளர்களுடனான சந்திப்பு, திருப்பலி என்பவை இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் பங்கு மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin