கொழும்புத்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புத்தொளி காண புதிதாய் வாழ்வோம் என்னும் ஆன்மீக புதுப்பித்தல் சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.
6ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிய இவ் ஆன்மீக புதுப்பித்தல் சிறப்பு நிகழ்வு மூன்று வாரங்கள் அங்கு நடைபெறவுள்ளது.
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில் குடும்ப தரிசிப்பு, வலய ரீதியான திருப்பலி, சிறுவர்கள், இளையோர்கள், பெரியோர்களுக்கான கருத்தமர்வுகள், வேதாகம பகிர்வு என்பவற்றுடன் குடும்ப உளஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளின் உதவியுடன் நடைபெறும் இவ்ஆன்மீக புதுப்பித்தல் நிகழ்வில் மக்கள் ஆர்வத்தோடு பங்குபற்றி வருகின்றனர்.

