யாழ்ப்பாணம் கொழும்புத்துறை சென். ஜோசப் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 14ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் திரு. தனறூபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கல்வி வலய பிரதி பணிப்பாளர் திரு. ஆயவன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அதிபர் திரு. நிலோச்குமார் மற்றும் முல்லைத்தீவு கொக்கிளாய் சிங்கள கலவன் பாடசாலை ஆசிரியர் அருட்தந்தை பற்றிக் லியோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் திருமதி பெர்னாண்டோ ராஜினி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

Peter, Paul என இரண்டு இல்லங்களை கொண்ட இப்பாடசாலையில் Peter இல்லம் 254 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தையும் Paul இல்லம் 193 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

By admin