குளமங்கால் புனித சவேரியார் ஆலய மூதாளர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட முதியோர் மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த மாதம் 30 ஆம் திகதி குளமங்கால் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்தின் மூத்த குருவாகிய அருட்தந்தை எஸ். ஜே. இம்மானுவேல் அவர்கள் கலந்து நிகழ்வை வழிப்படுத்தினார். புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இம்மன்றாத்திற்கு புனிதர்களான சவக்கீன் அன்னம்மாள் முதியோர் மன்றம் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளத.
அத்துடன் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் கடந்த இரண்டு வருடங்களாக முதியோர்களுக்கென ஒன்று கூடல்கள்இ விளையாட்டுக்கள்இ அனுபவப் பகிர்வுகள் எனப் பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.