குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பீடப்பபணியாளர்களுக்கான பாசறை நிகழ்வு 22ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
குழமங்கால் பங்கு பீடப்பணியாளர்கள் சேந்தாங்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு களப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற பாசறை நிகழ்வில் பங்குபற்றினர்.
பீடப்பணியாளர் பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி, குழு விளையாட்டுக்கள் கடல்பயணம், கடல் குளிப்பு, குழுச்செயற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கியிருந்த இச்சிறப்பு நிகழ்வில் 62 வரையான பீடப்பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.



