குளமங்கால் பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா பயணத்துடன் இணைந்த பாசறை நிகழ்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
குளமங்கால் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குளமங்கால் பங்கு மாணவர்கள் பருத்தித்தறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்திற்கு சென்று அங்கு அருட்தந்தை அருள்றாஜ் திரு. றொபின் மற்றும் திரு. ஜெகன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நெறிப்படுத்திய பாசறை நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்துரைகள், குழுவிளையாட்டுக்கள், படகுப்பயணம், மகிழ்வூட்டல் செயற்பாடுகள் இடம்பெற்ற இந்நிகழ்வில் 82 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.