நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ‘குற்றம் சுமந்த குருதி’ திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பேதுரு பவுல் ஆலய முன்றலில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்கு மக்களினிhல் ஆற்றுகை செய்யப்பட்ட இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழக பேராசிரியார் சிவலிங்கராஜா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.