குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நாளில் பலியானவர்களை நினைவுகூர்ந்து அருட்தந்தை கனிசியஸ் ராஜ் அவர்களின் தலைமையில் புனித யாகப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் அங்கு முன்னெடுக்கப்பட்டன.
1993ஆம் ஆண்டு இதே தினம் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது கிபிர் விமானங்கள் கண்மூடித்தனமாக மேற்கொண்ட தாக்குதலில் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் விமான குண்டுதாக்குதலுக்கு பயந்து ஆலயத்தில் தஞ்சமடைந்தவர்களென 9 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலரும் காயமடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.